நாட்டில் மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 11) தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிட இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தனது வேட்பாளர் மனுவை அங்குள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.
இந்த மனு தாக்கலின் போது சோனியா காந்தி மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா மற்றும் மருமகன் ராபர்ட் வதோரா ஆகியோர் உடனிருந்தனர். இதையடுத்து வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் பேசிய சோனியா காந்தி, 2004 மக்களவைத்தேர்லை மறக்க முடியாது. வாஜ்பாய் வெல்ல முடியாத நிலையில் இருந்தார். ஆனால், நாங்கள் வெற்றி கண்டோம்.
அந்த தேர்தலில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக கட்சியை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தோற்கடித்தது. மோடி ஒன்றும் வெல்ல முடியாதவர் அல்ல எனக் கூறினார். இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், கடந்த ஐந்து வருடங்களாக நரேந்திர மோடி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. தேர்தல் முடிவுக்கு பின்னர் அவருடைய வெற்றி குறித்த முழு பார்வையும் வெளிப்படும். ரஃபேல் குறித்து மோடியுடன் வெளிப்படையாக பேச்சுவார்த்தை நடத்த நான் தயாராகவுள்ளேன் எனக் கூறினார்.