ETV Bharat / bharat

நான்கு ஆண்டுகளில் பல சவால்களை சந்தித்தேன் - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி - So many challenges In the last four years Met

புதுச்சேரி: பல சவால்களை கடந்த நான்கு ஆண்டுகளில் சந்தித்தது வரலாறே சாட்சி என துணைநிலை ஆளுநராக கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

துணைநிலை ஆளுநராக கிரண்பேடி
துணைநிலை ஆளுநராக கிரண்பேடி
author img

By

Published : May 30, 2020, 5:34 PM IST

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பதவியேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், அவர் மக்களுக்கு சமூக வலைதளத்தில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், "நான்கு ஆண்டுகளை துணைநிலை ஆளுநராக பூர்த்தி செய்துள்ளேன். ஒவ்வொரு நாளும் புதுச்சேரி மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் உயர்ந்த நோக்கத்தை கொண்டிருந்தது. பல சவால்களை சந்தித்து கடந்த நான்கு ஆண்டுகளின் வரலாறே சாட்சி. கரேனா பாதிப்பு அனைத்து நிகழ்வையும் மாற்றியுள்ளது. கலால் துறையில் கணினி மூலம் மதுபான உரிமங்களை ஏலம் விடுவது, தற்போதைய நிதி வருவாய்க்கு தேவையாக உள்ளது. கேபிள் டிவி, சொத்து வரி, மின் நிலுவைத் தொகை ஆகியவற்றில் நிலுவைத் தொகையை வசூலிக்க வேண்டும். பல ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் உள்ள அரசு இட வாடகை, உரிம கட்டணங்களை மறு சீரமைப்பதில் பரிசீலனை அவசியம் தேவை.

சுற்றுலா வருவாய் இழப்பு உள்ளதால் தற்போதைய கையிலுள்ள சொத்துகளின் வருவாயை அதிகரிக்க வேண்டும். இச்சூழலில் நியமிக்கப்பட்ட அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்கள் நேர்மையாக செயல்படவேண்டும். புதுச்சேரிக்கு சேவையாற்ற ஐந்தாம் ஆண்டில் நுழைகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: 'அலுவலர்கள் தவறு செய்து இருந்தாலும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.