நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி (84) ஆகஸ்ட் 10ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக, டெல்லி கான்ட் பகுதியிலுள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பிரணாப் முகர்ஜிக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதற்கிடையில் அவருக்குக் கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதனால் பிரணாப் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இதனையடுத்து நேற்று (ஆகஸ்ட் 19) பிரணாப் உடல்நிலை குறித்து அவர் சிகிச்சை பெற்றுவரும் ராணுவ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பிரணாப் முகர்ஜியின் நுரையீரலில் தொற்று அதிகமாயுள்ளது. இதனால் அவரின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாகியுள்ளது. அவருக்குச் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது” எனக் குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில் பிரணாப் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ராணுவ மருத்துவமனை நிர்வாகம், “பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுகிறது. அதனால் தொடர்ந்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவருகிறது. மேலும், அவரை மருத்துவர்கள் தீவிரமாகக் கவனித்துவருகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க...பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்!