லடாக் எல்லையில் கடந்த மே 5ஆம் தேதி இந்திய - சீன வீரர்களுக்கும் இடையே தொடங்கிய இந்த மோதல், இன்றுடன் ஒரு மாத காலமாகியும் பிரச்னை முடிந்தபாடில்லை.
இந்நிலையில் சீனா, அதன் பாதுகாப்புப் படை வீரர்களை அவர்களின் இடம் என்று கூறிக்கொள்ளும் கிழக்கு லடாக் பகுதியில், பெரும் திரளான எண்ணிக்கையில் குவித்துள்ளது.
மறுபுறம் அதை எதிர்நோக்கும் விதமாக எல்லா நடவடிக்கைகளையும் மத்திய அரசு துரிதமாக எடுத்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், இந்திய பாதுகாப்புப் படையினரும்; சீனப் படையின் சார்பிலும் இருதரப்பில் இருந்தும் முக்கிய அலுவலர்கள் வரும் ஜுன் 6ஆம் தேதி சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
'என்றும் இந்தியா எந்த நாட்டுடைய பெருமையையும் குலைக்க முயற்சிக்காது. ஆனால், அதன் பெருமையைச் சீண்டி பார்க்க நினைத்தால், பொறுத்துக்கொள்ளாது' எனவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
'டோக்லாமில் இரு நாடுகளுக்கு மத்தியில் வெடித்த மோதல் சுமுகமான பேச்சு வார்த்தையில் தீர்க்கப்பட்டது. அதேபோல் இந்த விவகாரமும் முற்றுபெறும்' என்றார்.
இதையும் படிங்க: கரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியா முன்னோடி- ராம்நாத் கோவிந்த்