தெலங்கானா மாநிலத்தில் கரோனா வைரசைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக பள்ளிகள், கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள் அனைத்தும் மார்ச் 31ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரிட்டன் நாட்டிலிருந்து தெலங்கானா வந்த நபருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. தற்போது, அவரை காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அனுமதித்து பரிசோதனை நடைபெறுகிறது.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், "ஏற்கனவே, கரோனா பாதித்த ஐந்து நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், ஒருவர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்" என்றனர். இதனால், அம்மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: கரோனாவால் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,237 ஆக உயர்வு!