நாட்டின் முதன்மை விசாரணை அமைப்பான மத்தியப் புலனாய்வு அமைப்பின் புதிய இடைக்காலத் தலைவராக பிரவீன் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். 1988 குஜராத் ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த பிரவீன் சின்ஹா புதிய இயக்குநர் நியமனம் செய்யும்வரை இந்தப் பொறுப்பில் இருப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்தியப் புலனாய்வு அமைப்பின் தலைவராக இருந்த ஆர்.கே. சுக்லாவின் இரண்டாண்டு பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் இந்தப் புதிய நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2005ஆம் ஆண்டுக்குப் பின் மத்தியப் புலனாய்வு அமைப்புக்கு இதுவரை (பிரவீன் சின்ஹாவையும் சேர்த்து) நான்கு பேர் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் 183 பேர் காவலில் உள்ளனர் - மத்திய உள்துறை அமைச்சகம்