மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
பிரதமரின் அறிவிப்பையடுத்து, மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் பிரகலாத் படேல் இன்று வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களின் நூறு மீட்டர் எல்லைக்குள் ஒருமுறை உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற சுற்றுலாத்துறையின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் இதனைத் தெரிவித்தார். இந்த அறிவிப்பின்படி, மக்கள் பயன்பாட்டிலுள்ள சில முக்கிய பொருட்களுக்கு தடைவிதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க:இந்தியாவின் முதல் பிளாஸ்டிக் வங்கி!