கல்வான் பள்ளத்தாக்கில் அண்மையில் ஏற்பட்ட மோதலால் சீன ராணுவத்தால் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இதில் சீன வீரர்கள் 30 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் எனத் தகவல் வெளியான நிலையில்கூட, வீரர்கள் இறப்பு குறித்து இதுவரை சீனா வாய் திறக்கவில்லை. இருந்தபோதிலும், தற்போதுவரை எல்லையில் பதற்றம் நிலவிவருகிறது.
இந்நிலையில் இந்திய ரிசர்வ் பட்டாலியனில் உள்ள சிக்கிம் காவல் படை இந்திய- சீன எல்லையில் பாதுகாப்பிற்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிக்கிம் மண்டல காவல் துறை துணைத் தலைவர் (டிஐஜி) செய்தியாளர்களிடம் கூறுகையில், “எல்லையில் படைகளை நிறுத்திவைத்திருப்பது போருக்கான அறிகுறியல்ல, பாதுகாப்பிற்காக மட்டும்தான்.
சிக்கிம் எல்லைப் பகுதியாக இருப்பதால், இம்மாநில காவல் துறை விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தேவை ஏற்பட்டால் ராணுவத்திற்கு காவல் துறை உதவ தயார்” என்றார்.
சீனாவின் திபெத்திய தன்னாட்சி பிராந்தியத்துடன் 220 கி.மீ. நீளமுள்ள எல்லையை சிக்கிம் பகிர்ந்துகொள்கிறது. அதுமட்டுன்றி கடந்த காலங்களில் இந்த எல்லைப் பகுதிகளில் மோதல்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...வருமான வரி தாக்கல்: கால அவகாசம் நீட்டிப்பு