ETV Bharat / bharat

இந்திய - சீன எல்லையில் பதற்றம்: இருநாட்டு உறவுக்கு ஆபத்தா?

author img

By

Published : May 11, 2020, 9:52 PM IST

டெல்லி: இந்திய - சீன எல்லையில் நிலவும் பதற்றம் குறித்து விளக்குகிறது இந்தச் செய்தி தொகுப்பு

இந்திய - சீன எல்லையில் பதற்றம்: இருநாட்டு உறவுக்கு ஆபத்தா?
இந்திய - சீன எல்லையில் பதற்றம்: இருநாட்டு உறவுக்கு ஆபத்தா?

இந்தியாவின் வட எல்லையில், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே பல இடங்களில் இன்னும் எல்லை இன்னும் வரையறுக்கப்படவில்லை. எல்லை வரையறை செய்யப்படாத பகுதிகளில் நிர்வாக முக்கியத்துவம் இடங்களை சீனா பிடிவாதமாக தன்னுடைய கட்டுக்குள் கொண்டுவர விரும்புகிறது.

இதனால் அருணாசல பிரதேசம் சிக்கிமில் பல இடங்களில் எப்பொழுதும் பதற்றம் நிலவிவருகிறது. இந்திய-சீன எல்லையான சிக்கிம் பகுதியில் இந்திய வீரர்களுக்கும், சீன வீரர்களுக்கும் நகு லா பகுதியில் இன்று மோதல் ஏற்பட்டது. இந்திய - சீன வீரர்கள் ஒருவரையொருவர் தாக்கினார்கள்.

கற்களை எடுத்தும் வீசினார்கள். இந்த கைகலப்பில் இரு தரப்பிலும் மொத்தம் 150 பேர் ஈடுபட்டதாக தகவல் கிடைத்துள்ளது. எல்லைப் பகுதியில் காவலில் இருந்த வீரர்கள் இடையே இந்த மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மோதலில் நான்க் இந்திய வீரர்களுக்கும், ஏழு சீன வீரர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பேச உடனே இருநாட்டு ராணுவ அலுவலர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அங்குப் பதற்றம் குறைந்தது. இது குறித்து ராணுவ அலுவலர் ஒருவர் நமது ஈடிவி பாரத்திடம் கூறுகையில், “இந்திய - சீன எல்லையான சிக்கிம் பகுதியில் எல்லைப் பிரச்னை நிலவுவதால், இது போன்ற மோதல்கள் அவ்வபோது நடக்கின்றன.

கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்டில் லடாக்கில் பாங்காங் ஏரிப்பகுதியில் இருநாட்டு வீரர்களும், கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர்” எனக் குறிப்பிட்டார்.

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் சஞ்சீப் கே.ஆர். பருவா கூறுகையில், உலக நாடுகள் சீனாவிற்கு எதிராக இந்தியாவைத் திருப்பி விடுவதாக குற்றச்சாட்டு எழுந்தபோதிலும், இதை இந்தியா மறுத்துள்ளது. முன்னதாக கரோனா வைரஸ் சீனாவினால்தான் உலகம் முழுவதும் பரவியது என, சீனா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றச்சாட்டு முன்வைத்தாலும், இந்தியாவின் ராணுவ தளபதி, பிபின் ராவத் “கரோனா வைரஸ் என்பது உயிரியல் போரின் விளைவாகும்.

இதற்கு ஒரு நாட்டை கைக்காட்டுவது முடிவாகாது” எனக் குறிப்பிட்டிருந்தார். இருந்தபோதிலும், தொடர்ந்து இந்திய - சீன எல்லையில் பதற்றம் நிலவுவது, இரு நாட்டு உறவை சிதைக்கும் வழியாகும்.

இதையும் படிங்க...10 மாநிலங்களில் புதிதாக யாருக்கும் கரோனா இல்லை - ஹர்ஷ் வர்தன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.