ETV Bharat / bharat

கர்நாடக எதிர்கட்சித் தலைவராக சித்த ராமையா நியமனம் - Siddaramaiah

டெல்லி: கர்நாடக மாநில எதிர்கட்சித் தலைவராக அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான சித்த ராமையா நியமிக்கப்பட்டுள்ளார்.

siddaramaiah
author img

By

Published : Oct 10, 2019, 9:33 AM IST

சித்த ராமையா
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் உத்தரவின் பேரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் விடுத்துள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கர்நாடக சட்டமன்ற மேலவைத் தலைவராக பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார். சித்த ராமையாவை எதிர்கட்சித் தலைவராக நியமிக்க, காங்கிரஸ் நிர்வாகக் குழுவின் உயர்மட்டக் குழுவில் முடிவெடுக்கப்பட்டது.

குற்றச்சாட்டு
கர்நாடகாவில் காலியாகவுள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு வரும் டிசம்பரில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை, சித்த ராமையா வழிநடத்தவுள்ளார்.
கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியை சித்த ராமையா கடுமையாக விமர்சித்து வருகிறார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முதலமைச்சர் எடியூரப்பா என ஒருவரும் உதவி செய்யவில்லை என அவர் குற்றஞ்சாட்டி வருகிறார்.

ஒரே கல்லில் மூன்று மாங்காய்
சித்த ராமையா, தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை பூர்வீகமாகக் கொண்டவர். அங்கிருந்து காங்கிரசுக்குத் தாவி, முதலமைச்சர் ஆனார். மதச்சார்பற்ற கட்சியில் இருந்து அவர் விலக, குமாரசாமியின் நெருக்கடிதான் காரணம் என கூறப்பட்டது. இந்த நிலையில் சித்த ராமையா காங்கிரஸ் தரப்பில் எதிர்கட்சித் தலைவர் ஆக்கப்பட்டுள்ளார். இது ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்கும் காங்கிரஸின் ராஜ தந்திரமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் பாரதிய ஜனதா கட்சியையும் எதிர்க்க வேண்டும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் நெருங்கியிருக்கக் கூடாது, காங்கிரஸின் உள்கட்சிப் பிரச்னையையும் சமாளிக்க வேண்டும் என்பதே கர்நாடக எதிர்கட்சிக்கு தற்போதைய தேவை.
அதை கவனத்தில் கொண்டு காங்கிரஸ், சித்த ராமையாவை எதிர்க்கட்சித் தலைவராக்கி உள்ளது.

இதையும் படிக்கலாமே

‘நான் நாங்குநேரியில் வெற்றி பெறுவது உறுதி’ - காங்கிரஸ் வேட்பாளர் நம்பிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.