கரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதை பொறுப்பாக நடைமுறைபடுத்தும் பணியில் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த சூழலில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த காவலர்கள் ஊரடங்கு காலத்தில் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாநிலத்தில் உள்ள பாட்டியாலா பகுதியில், நிஹாங்க்ஸ் என்ற அமைப்பு ஊரடங்கை கடைபிடிக்காமல் அவர்களின் மத வழிபாட்டுத் தலத்தில் ஒன்றாக குழுமியுள்ளனர். சீக்கிய மதத்தின் தீவிர பற்றாளர்களான இவர்கள் தங்களின் கூட்டத்தை கலைக்கமாட்டோம் என காவலர்களிடம் முரண்டுபிடித்துள்ளனர்.
இவர்களை கலைக்க காவலர்கள் முற்பட்டபோது நிஹாங்க்ஸ் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் காவல் அலுவலர் ஹர்ஜீத் சிங் என்பவரின் கை வெட்டப்பட்டது. இருப்பினும் அவர்களை ஒடுக்கி கைது செய்த காவலர்கள் ஹர்ஜீத் சிங்கை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், அவருக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்து மாற்றுக்கை பொறுத்தப்பட்டுள்ளது. இவரது உடல்நிலை குறித்து தொடர்ச்சியாக அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் கண்காணித்துவருகிறார். இன்று அமரீந்தர் தனது ட்விட்டர் பதிவில், ஹர்ஜீத் சிங் தற்போது குணமடைந்து பூரண நலத்துடன் உள்ளார். விரைவில் பணிக்கு திரும்பவுள்ள அவருக்கு எனது வாழ்த்துகள் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: 2.3 கோடி குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து தரவில்லை - யுனிசெப்