மாநிலங்களின் தேவை நீடிக்கும் வரை, ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும், மே 1 முதல் இயக்கப்பட்ட 4 ஆயிரத்து 197 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில், 58 லட்சத்துக்கும் அதிகமானப் பயணிகள் பயணித்ததாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அலுவலர் கூறுகையில், "ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் முடிந்துவிட்டன என்று சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது சரியானதல்ல. மாநில அரசாங்கங்களிடமிருந்து உத்தரவு வரும் வரை, இந்திய ரயில்வே இந்த ரயில்களைத் தொடர்ந்து இயக்கும்" எனத் தெரிவித்தார்.
மேலும், ஜூன் மூன்றாம் ஆம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 4,197 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
அதோடு, புதன்கிழமை காலை 9 மணி வரை, 81 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் 4,197 ரயில்கள் முக்கிய ஐந்து மாநிலங்களான குஜராத் (1,026), மகாராஷ்டிரா (802), பஞ்சாப் (416), உத்தரப்பிரதேசம் (294) பிகார் (294) மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் ரயில்கள் இயக்கப்பட்டன.
மேலும், மே 12 முதல் டெல்லியை இணைக்கும், 15 ஜோடி சிறப்பு ராஜதானி ரயில்களை இயக்குவதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.