ஜாபுவா (மத்திய பிரதேசம்): மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவா பகுதியில் உள்ள கல்யாண்புரா காவல்நிலையத்தில் காவலராக பணிபுரியும் காவலர் ஒருவர், ஷோலே படத்தில் வரும் பிரபலமான வசனத்தை தனது ஜீப்பில் உள்ள ஒலிபெருக்கியில் பேசினார்.
இது தொடர்பான காணொலி வைரலானது. இதற்கு பலரும் எதிர்ப்பு, ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் கேட்டு சம்மந்தப்பட்ட காவல்துறையினருக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கூடுதல் காவல் ஆணையர் ஆனந்த் சிங் கூறுகையில், “சம்மந்தப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. இது எங்களின் கவனத்துக்கு வந்ததும், இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம்.
இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது” என்றார். ஏற்கனவே, மத்தியப் பிரதேசத்தில் சிங்கம் பட பாணியில் இரு கார்களின் மீது நின்று சாகசம் செய்த காவல் அலுவலர் ஒருவர் சிக்கினார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: ’சிங்கம்’ படத்தின் ஸ்டன்ட் செய்த போலீஸ் - ரூ.5 ஆயிரம் அபராதம்!