ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஷோப்பியன் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையாக பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஜனநாயக் கட்சியின் ஆட்சி கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.
குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கும்போதுதான் அதிகப்படியான பயங்கரவாதத் தாக்குதல்கள் நடப்பதாக கூறப்படும் நிலையில் இன்று மற்றொரு தாக்குதல் நடந்துள்ளது.