ETV Bharat / bharat

'சீன பொருள்களை இந்திய மக்கள் புறக்கணிக்க வேண்டும்' - முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

போப்பால்: இந்தியர்கள் சீனப் பொருள்களைப் பயன்படுத்துவதைப் புறக்கணித்து அந்நாட்டின் பொருளாதாரத்தை உடைக்க வேண்டும் என்று மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jun 21, 2020, 4:51 AM IST

shivraj singh chouhan
shivraj singh chouhan

கல்வான் பள்ளத்தாக்கில் சீனா ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இந்தியாவில் சீனப் பொருள்களைப் பயன்படுத்துக் கூடாது என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகானும் இக்கருத்தை வழிமொழிந்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "சீனா நடத்திய தாக்குதலுக்கு இந்தியா ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும். மேலும் நம் நாட்டில் உள்ள என் அருமை சகோதர, சசோதரிகள் அனைவரும் சீனா பொருளாதாரத்தின் வளர்ச்சியை உடைக்க வேண்டும். அதன்படி சீனா நாட்டுப் பொருள்களைப் பயன்படுத்துவதைப் புறக்கணித்துவிட்டு, நம் நாட்டுப் பொருள்களை அதிகமாக வாங்கி பயன்படுத்துங்கள்" என்றார்.

கல்வான் தாக்குதலில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாதுகாப்புப் படை வீரரான நைக் தீபக் குமார் வீரமரணம் அடைந்ததையடுத்து, அவர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு அறிவித்ததோடு, அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

இதையும் படிங்க: 'சீனப் பொருள்களுக்கு தடை, இந்திய பொருளாதாரத்தை பாதிக்காது'- சுதேஷ் வர்மா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.