ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அவரது ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 22 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டார்.
ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பே மத்தியப் பிரதேச முதலமைச்சர் பதவியை கமல்நாத் ராஜினாமா செய்தார். இந்நிலையில், இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் அம்மாநில முதலமைச்சராக சிவராஜ் சிங் சவுகான் பதவியேற்கவுள்ளார்.
சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 104 உறுப்பினர்கள் ஆதரவு தேவை, பாஜகவுக்கு 107 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்புமா காங்கிரஸ் அரசு!