காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராத்திய சிந்தியா, மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகானை அலுவலகத்தில் இன்று சந்தித்தார்.
அவரை வரவேற்ற சவுகான், “ராவணன் ஆட்சியை அகற்ற வந்த விபிஷணன் ஜோதிராத்திய சிந்தியா” என வர்ணித்தார். மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்துவரும் நிலையில் சவுகான் இவ்வாறு கூறினார்.
சவுகானின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாநில கட்சி அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள கருத்தில், “சிவ்ராஜ் சிங் மீண்டும் சிந்தியா மீது தாக்குதலை தொடர்கிறார். அவர் அவரை (சிந்தியாவை) ராவண குடும்பத்தைச் சேர்ந்தவர் என்கிறார். இது மிகவும் வெட்கக்கேடானது.
சிந்தியாவை அவர் கௌரவிக்க அழைத்து வந்தாரா? அல்லது பழிவாங்கவா?” என்று அதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
சிந்தியாவுக்கும், சவுகானுக்கும் இடையே முன்னர் பெரும் வார்த்தை மோதல் ஏற்பட மாண்ட்சூர் விவசாயிகள் மீதான துப்பாக்கிச் சூடு காரணமாக அமைந்தது.
இதையும் படிங்க: இந்திய-வங்கதேசம் இடையே ரயில், பேருந்து போக்குவரத்து நிறுத்தம்!