இதுதொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் வெளிவந்துள்ள தலையங்கத்தில், "மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையை இழிவுப்படுத்தும் முயற்சிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இந்த முயற்சிகள் 'வெளியாட்களால்' செய்யப்படுகின்றன.
இடைப்பட்ட காலத்தில், மும்பை பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்டது. மும்பையை அவமதித்த ஒரு நடிகையை (கங்கனா ரணாவத்) சட்டவிரோதமாக கட்டப்பட்ட அலுவலகத்தை நிர்மாணிப்பது தொடர்பாக மாநகராட்சி நடவடிக்கை எடுத்ததை அடுத்து பி.எம்.சி (பிரிஹன்மும்பை மாநகராட்சி) 'பாபர்' என்று குறிப்பிடப்பட்டது.
பாஜகவின் மகாராஷ்டிரா பிரிவு முதலில் மும்பையை பாகிஸ்தானுடனும், பின்னர் பாபருடனும் ஒப்பிட்ட மக்களுக்கு பின்னால் நிற்கிறது. மும்பையை பாகிஸ்தானுடனும் பிஎம்சியை பாபரின் ராணுவத்துடனும் ஒப்பிட்டுப் பார்ப்பவர்களுக்குப் பின்னால் மகாராஷ்டிராவின் பிரதான எதிர்க்கட்சி நிற்கிறது என்பது விந்தையானது. ஆனால் அவர்கள் பிகார் தேர்தலில் சுஷாந்த் மற்றும் கங்கனாவை ஆதரித்து வெற்றி பெற நினைக்கிறார்கள். ராஜ்புத், க்ஷத்திரிய பிகாரின் உயர் வர்க்கத்தின் வாக்குகளை பெறுவதற்கான முயற்சியில் பாஜக இயங்குகிறது. இதனால் மகாராஷ்டிராவை அவமதித்தால் பரவாயில்லை என்று நினைக்கிறது.
மகாராஷ்டிராவை அவமதிக்கும்போது டெல்லியில் அமர்ந்திருக்கும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு மத்திய அமைச்சர் கூட எதிர்ப்பு குரல் கொடுக்கவில்லை. 'தாக்கரே' மற்றும் 'பவார்' ஆகியோர் மகாராஷ்டிராவில் சுய மரியாதைக்குரிய இரண்டு பிராண்டுகள் என்றும், அவர்களின் பின்பத்தை அழித்து மும்பையை கைப்பற்ற பாஜக விரும்புகிறது என்றும் சேனா குற்றம்சாட்டியுள்ளது.
நடிகை கங்கனா ரணாவத்தின் நடவடிக்கைகளை கண்டிக்க மகாராஷ்டிரா மற்றும் திரையுலக மக்கள் முன்வராதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. கங்கனாவின் கருத்து முழு திரையுலகத்தினரின் கருத்து அல்ல என்று சொல்லப்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் பெரிய நடிகர்களான அக்ஷய் குமார் முன்வந்திருக்க வேண்டும். ”என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.