மகாராஷ்டிரா மாநிலம், அகமதுநகர் மாவட்டத்தில் புகழ்பெற்ற சாய்பாபா ஆலயம் அமைந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவியான சாய்பாபாவை நினைவு கூரும் விதத்தில், அவர் பிறந்த இடமாகக் கருதப்படும் சீரடியில் இந்தக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்து இஸ்லாமியர்களின் ஒற்றுமையைக் கற்பித்த சாய்பாபாவுக்கு நாடெங்கிலும் பக்தர்கள் பலர் உள்ள நிலையில், சீரடி இந்தியாவின் முக்கிய ஆன்மிகத் தலமாக விளங்குகிறது.
அண்மையில் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பதவியேற்ற உத்தவ் தாக்கரே சாய்பாபா பிறப்பிடம் குறித்து கூறியுள்ள கருத்து சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சாய்பாபா பிறந்த இடம் சீரடி என்பது உறுதிப்படுத்தப்படாத தகவல் எனவும், அவர் பிறந்தது மகாராஷ்டிராவில் உள்ள பர்பானி என்ற பகுதியாக இருக்கவே வாயப்புகள் அதிகம் எனவும் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
பர்பானி பகுதியின் மேம்பாட்டுக்காக சிறப்பு நிதி ஒதுக்கீடும் மகாராஷ்டிர அரசு செய்துள்ளது. நீண்ட காலமாக சீரடியில் சாய்பாபாவை வணங்கிவரும் பக்தர்களுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சரின் இந்நடவடிக்கை கடும் அதிருப்தியைக் கிளப்பியுள்ளது.
இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இன்று ஒரு நாள் சீரடி ஆலயம் மூடப்படும் என ஆலய நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால், வழக்கம்போல் இன்று ஆலயம் திறக்கப்பட்டு தரிசனம் நடைபெற்று வருகிறது. இது குறித்து ஆலயத்தின் தலைமைச் செயல் அலுவலர் தீபக் மதுகார், ஆலயம் மூடப்படும் என ஊடகத்தில் வெளியான செய்தி உண்மையல்ல எனவும், ஆலயம் வழக்கம்போல இன்றும் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'வந்தே மாதரத்தை ஏற்காதவர்களுக்கு நாட்டில் வாழ உரிமையில்லை'