ETV Bharat / bharat

தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த ஷீலா ரஷீத்! - தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த ஷீலா ரஷீத்

ஸ்ரீநகர்: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியான ஷீலா ரஷீத் மீது, அவரது தந்தை காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் புகார் அளித்துள்ளார்.

ஷீலா ரஷீத்
ஷீலா ரஷீத்
author img

By

Published : Dec 1, 2020, 2:02 PM IST

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியான ஷீலா ரஷீத் மீது அவரது தந்தை அப்துல் ரஷீத் ஷோரா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். ஜம்மு - காஷ்மீர் காவல்துறை இயக்குநரிடம் அவர் அளித்த எழுத்துப்பூர்வமான புகாரில், தன்னைக் கொலை செய்துவிடுவேன் என ஷீலா ரஷீத் மிரட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அப்துல், "என்னைக் கொலை செய்துவிடுவேன் என ஷீலா ரஷீத் மிரட்டிவருகிறார். என்னுடைய மூத்த மகள், மனைவி, பாதுகாவலர் சகீப் அகமது ஆகியோர் அவருக்கு ஆதரவாக உள்ளனர். 2017ஆம் ஆண்டு, ஷீலா அரசியலில் ஈடுபடத் தொடங்கிய பின், எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. எனவே, உயிருக்கு பயந்து ஜம்முவுக்குச் சென்றேன்.

அப்துல்

கடந்த 2017ஆம் ஆண்டு, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளித்ததாக ஜாகூர் வட்டாலி மீது உபா சட்டம் பாய்ந்தது. அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, சனத் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு என்னை அழைத்தார். ஷீலாவை அரசியலில் ஈடுபட அனுமதிக்குமாறு அவர்கள் என்னை கேட்டுக் கொண்டார்.

  • 1) Many of you must have come across a video of my biological father making wild allegations against me and my mum & sis. To keep it short and straight, he's a wife-beater and an abusive, depraved man. We finally decided to act against him, and this stunt is a reaction to that. pic.twitter.com/SuIn450mo2

    — Shehla Rashid (@Shehla_Rashid) November 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம் என்ற கட்சியைத் தொடங்க இருந்தனர். அதில் சேர்வதற்கு எனக்கு 3 கோடி ரூபாய் நிதி அளிக்க அவர்கள் தயாராக இருந்தனர். சட்டவிரோத செயல்களுக்காக அந்தப் பணம் பயன்படுத்தப்படும் என நான் நினைத்தேன். எனவே, அவர்களுடன் சேர வேண்டாம் என மகளிடம் தெரிவித்தேன்" என்றார். இருப்பினும், இந்தப் புகாரை ஷீலா முழுமையாக மறுத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.