ETV Bharat / bharat

ட்ரம்ப்புக்கு ஒன்றும் தெரியாது  - சசி தரூர் - அதிபர் ட்ரம்ப்

டெல்லி: காஷ்மீர் சிக்கலுக்கு மத்தியஸ்தம் செய்ய அதிபர் ட்ரம்ப்பை பிரதமர் மோடி அழைத்திருக்க வாய்ப்பில்லை என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் சசிதரூர் கூறியுள்ளார்.

சசி தரூர்
author img

By

Published : Jul 23, 2019, 1:30 PM IST

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றார். இப்பயணத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்தார். அப்போது காஷ்மீர் விவகாரத்தில் தன்னை மத்தியஸ்தம் செய்துவைக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாக ட்ரம்ப் கூறினார். உடனடியாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் பிரதமர் மோடி அவ்வாறு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்று விளக்கமளித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்த இம்ரான் கான்

இந்நிலையில், காங்கிரஸ் முக்கிய தலைவரும் திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர் கூறுகையில், "டிரம்ப் என்ன சொல்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை. காஷ்மீர் பிரச்னை குறித்து யாரும் அவருக்கு விளக்கவில்லை போலும். காஷ்மீர் விவகாரத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் கொள்கை மிகத்தெளிவானது.

இந்தியா மூன்றாம் நபர் யாரையும் மத்தியஸ்தத்துக்கு அழைக்காது. பேச்சுவார்த்தை என்று நடத்தினால் அது பாகிஸ்தானுடன் மட்டும் நடத்தப்படும். எனவே பிரதமர் மோடி வேறு நபரிடம் உதவி கேட்டிருக்க வாய்ப்பில்லை" என்றார்.

அமைச்சர் ஜெய்சங்கர்
அமைச்சர் ஜெய்சங்கர்

மேலும் இன்று நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், "காஷ்மீரில் மத்தியஸ்தம் செய்யுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை இந்தியா கோரவில்லை" என்றும் விளக்கம் அளித்தார்.

Intro:Body:

S-Tharoor, ex-MoS MEA: Trump doesn't know what's he saying. Maybe he didn't understand the issue or nobody briefed him. Impossible that Modi will ask anyone else because it's our clear policy that we don't want a 3rd party mediation. If we've to talk to Pak,we'll do that directly

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.