ETV Bharat / bharat

அமலாக்கத் துறையினர் முன் ஆஜராகும் சரத்பவார்..! - Maharashtra Election 2019

மும்பை: சட்டவிரோத பணபரிவர்த்தனை தொடர்பான அமலாக்கத் துறையினர் விசாரணைக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் வரும் 27ஆம் தேதி ஆஜராக இருக்கிறார்.

சரத்
author img

By

Published : Sep 25, 2019, 5:01 PM IST

மகாராஷ்டிராவின் கூட்டுறவு வங்கிகளுக்கு 2007ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை ஏராளமான சர்க்கரை ஆலைகளுக்கு கடன் வழங்கப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் மகாராஷ்டிரா மாநில முன்னாள் துணை முதலமைச்சரான அஜித் பவார் கூட்டுறவு வங்கிகளின் இயக்குநராக செயல்பட்டார்.

கடன் வழங்கியதால் அரசுக்கு ரூ.1000 கோடிக்கும் மேலாக இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக பல்வேறு கட்சிகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர் மீது அமலாக்கத் துறை வழக்கப்பதிவு செய்துள்ளது. அதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இதனால் அமலாக்கத் துறையினர் விசாரணைக்கு வரும் 27ஆம் தேதி அவர் ஆஜராகவுள்ளார். மகாராஷ்டிரா மாநில தேர்தல் அடுத்த மாதம் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்த வழக்கு சரத்பவாருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க தவறும் காங்கிரஸ்?

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/bharat/bharat-news/sharad-pawar-to-face-ed-investigation-on-sept-27/na20190925152605751

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.