காரைக்கால் மாவட்டம் காசாக்குடிமேடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமார்(40). இவர் தனது மனைவி, ஒன்பது வயது மகளுடன் வசித்துவந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4ஆம் தேதி தனது மகளை அவர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இது குறித்து அவரது மனைவி தெரிய வந்த நிலையில் கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து செல்வக்குமாரை கைது செய்து சிறையிலடைத்தனர். இது தொடர்பான வழக்கு காரைக்கால் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விசாரணை நிறைவுபெற்று இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி, செல்வக்குமாருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு புதுச்சேரி அரசு ரூபாய் 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடியின் வங்கதேச பயணம் ரத்து