ETV Bharat / bharat

'பொய்யான வாக்குறுதியுடன் பெண்ணுடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்புணர்வு ஆகாது' - Latest national news

திருமணம் செய்வேன் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து பெண்ணுடன் உடலுறவு கொண்டதை, பாலியல் வன்புணர்வு ஆகக் கருதமுடியாது என ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதி பனிபிராஹி கருத்து தெரிவித்துள்ளார்.

Sex on false promise
Sex on false promise
author img

By

Published : May 24, 2020, 8:41 PM IST

Updated : May 25, 2020, 2:39 AM IST

கட்டாக் (ஒடிசா): ஒருவர் திருமணம் செய்வேன் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து பெண்ணுடன் உடலுறவு கொண்டது, பாலியல் வன்புணர்வு ஆகக் கருதமுடியாது என ஒடிசா உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள கோராபுட் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் மீது 19 வயதான பழங்குடி பெண் பாலியல் வன்புணர்வு வழக்குத் தொடுத்தார். அந்தப் பெண்ணும், மாணவனும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் ஒன்றாகப் பழகியுள்ளனர். நான்கு ஆண்டு பழக்கத்தின்போது இரண்டு முறை அந்தப் பெண் கர்ப்பம் அடைந்துள்ளார்.

அப்பாவித்தனம் மற்றும் திருமணம் செய்து கொள்கிறேன் எனும் ஆசையைக்காட்டி தன்னுடன் உடலுறுவு வைத்துக் கொண்டார் என்றும்; மேலும், மாத்திரை உட்கொண்டு கருக்கலைப்புக்கு வற்புறுத்தினார் எனவும் பாதிக்கப்பட்ட அந்தப்பெண் தான் கொடுத்திருந்த புகாரில் கூறியிருந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர், அம்மாணவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அந்த மாணவன் ஆறு மாதங்களாக சிறையில் இருந்தார்.

இத்தருணத்தில் பிணை கோரி ஒடிசா உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார் மாணவர். அப்போது மாணவனுக்குப் பிணை வழங்கிய நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும்; பாதிக்கப்பட்டவரை எவ்விதத்திலும் மிரட்டக்கூடாது என்றும் நிபந்தனையுடன் பிணை வழங்கியது.

அப்போது நீதிபதி பனிபிராஹி தனது 12 பக்க உத்தரவில், 'எந்தவித உத்தரவாதமும் இல்லாத நிலையில்கூட, ஒருமித்த பாலியல் உறவு, உண்மையிலேயே பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் 376 பிரிவின் கீழ் கொண்டு வர இயலாது. மேலும் இதுபோன்ற வழக்குகள் எப்படி எடுத்துக் கொள்ளப்படுகிறது என்ற கேள்வியையும் எழுப்புகின்றன.

இது அவரவர் சுயவிருப்பத்துடன் நடைபெறும் நிகழ்வாகத்தான் பார்க்க நேருகிறது. திருமணம் செய்வேன் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து பெண்ணுடன் உடலுறவு கொண்டதை பாலியல் வன்புணர்வு ஆகக் கருதமுடியாது' எனத் தெரிவித்துள்ளார்.

Last Updated : May 25, 2020, 2:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.