ETV Bharat / bharat

காஷ்மீரில் இந்தாண்டு இதுவரை 180 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - டிஜிபி தில்பக் சிங்!

ஸ்ரீநகர்: காஷ்மீரில் இந்தாண்டில் இதுவரை 180 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என டிஜிபி தில்பக் சிங் தெரிவித்துள்ளார்.

ol
ol
author img

By

Published : Oct 13, 2020, 1:01 AM IST

காஷ்மீரில் பார்குல்லா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கிய தளபதியும், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதியுமான ஷைபுல்லா மற்றும் அவரது உள்ளூர் கூட்டாளி ஒருவரும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தகவலை டிஜிபி தில்பக் சிங் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், " பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள ஷைபுல்லாவுக்கு பம்பூரின் நோவ்காம், சடூரா மற்றும் காண்டிசால் பகுதியில் ஏற்பட்ட தாக்குதல்களுக்கும், பாதுகாப்புப் படையினர் மீது அரங்கேறிய தொடர்ச்சியான தாக்குதல்களிலும் தொடர்பு உள்ளவர்.

காஷ்மீரில் இந்தாண்டு இதுவரை மொத்தமாக 75 ஆபரேஷன்கள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 180 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதேவேளை பயங்கரவாதிகள், அவர்களுக்கு உதவியவர்கள் என மொத்தம் 138 பேர் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உளவுத்துறை உதவியுடன் நாட்டில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபடவுள்ளோர் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.

பயங்கரவாத அமைப்பில் சேர முயன்ற 26 இளைஞர்களுக்கு முறையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு பெற்றோர் மற்றும் காவல்துறையின் உதவியுடன் குடும்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், இந்த தாக்குதலினால் 19 காவலர்கள், 21 சிஆர்பிஎஃப் வீரர்கள், 15 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது" எனத் தெரிவித்தார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.