ஜார்கண்டில் உள்ள சோன் ஆற்றில் இன்று காலை 6 மணிக்கு ஏழு சிறுவர்கள் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஏழு பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதையடுத்து உள்ளூர்வாசிகள் கொடுத்த தகவலின்பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர் நீரில் மூழ்கிய சிறுவர்களின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பல மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு ஐந்து சிறுவர்களை மட்டும் மீட்டனர். மேலும், இரண்டு சிறுவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கரசங்கால் ஏரியில் மூழ்கி நான்கு பெண்கள் உயிரிழப்பு!