ETV Bharat / bharat

இந்தியாவில் நடைபெற்று வந்த ’கோவிஷீல்ட்’ தடுப்பூசி பரிசோதனை திடீர் நிறுத்தம்! - கொரோனா வைரஸ்

இந்தியாவில் நடைபெற்று வந்த ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ’கோவிஷீல்ட்’ மருந்தின் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

covid
covis
author img

By

Published : Sep 10, 2020, 9:14 PM IST

உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனைக் கட்டத்தில் உள்ளன. அதன்படி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ரா ஜெனகா மருந்து நிறுவனமும் இணைந்து தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை நடைபெற்று வருகிறது.

இந்த மருந்து பல நாடுகளில் உள்ள தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் நடைபெறவுள்ள இந்த மருந்தின் பரிசோதனையில் ஆயிரத்து 600 பேர் கலந்துக்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த மருந்து செலுத்தப்பட்ட சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதை தொடர்ந்து, மருந்தின் பரிசோதனை இந்தியா உள்பட அனைத்து உலக நாடுகளிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்த மருந்தைத் தயாரிக்க இந்தியாவில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள சீரம் இன்ஸ்டிடியூட் வெளியிட்ட அறிக்கையில், "பிரிட்டனில் பரிசோதனை மீண்டும் தொடங்கும் வரை, இந்தியாவிலும் கரோனா மருந்து பரிசோதனையை நிறுத்தி வைத்துள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.