உன்னாவ் சிறுமி பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளி என டெல்லி அமர்வு நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட குல்தீப் சிங் செங்காரின் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டது. இது தொடர்பாக உ.பி. மாநில சட்டப்பேரவை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “2019 டிசம்பர் 20ஆம் தேதி பாலியல் வன்புணர்வு குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட குல்தீப் சிங் செங்காரை சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி, அவரது பங்கர்மாவ் தொகுதி எம்எல்ஏ இல்லாத தொகுதி" என அறிவிக்கப்பட்டுள்ளது.
17 வயதான சிறுமி ஒருவர் உத்தரப் பிரேதச பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் குற்றஞ்சாட்டினார். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்த இந்த வழக்கில், கடந்த டிசம்பர் 20ஆம் தேதி குல்தீப் சிங்கை குற்றவாளி என அறிவித்து அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது டெல்லி அமர்வு நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து அவர் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது அவரது சட்டப்பேரவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உன்னாவ் வழக்கு கடந்து வந்த பாதை