ஈடிவி பாரத் ஆங்கில இணைய தொலைக்காட்சிக்கு பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
கேள்வி: மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி நியாயம்தானா?
பதில்: மகாராஷ்டிராவில் அவர்களின் (சிவசேனா) ஆணவம் சிதைந்துவிட்டது. அனைவரும் அவர்களை பார்த்து சிரிக்கின்றனர். தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அவசியமானது. நிலைமை மாநிலத்துக்கு சாதகமாக திரும்பும் சமயத்தில், குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கு நீக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும்.
கேள்வி: மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரின் குடியரசுத் தலைவர் ஆட்சி பரிந்துரைக்கு எதிராக சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் அளித்துள்ளதே?
பதில்: அவர்கள் எங்கு வேண்டுமென்றாலும் செல்லலாம். அவர்களை யாரும் தடுக்க முடியாது. கடந்த 18 நாட்களாக ஒரு அரசை அமைக்க நாங்கள் முயற்சித்தோம். அங்கு பாஜகதானே மிகப்பெரிய கட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டது. சிவசேனாவுடன் எங்கள் கூட்டணி இயல்பானது (இயற்கையானது). ஆனால் அவர்கள் நடந்து கொண்ட விதம், கையை முறுக்கும் தன்மை ஆகியவற்றை அவர்கள் விடவேண்டும். மக்களின் உத்தரவை (பாஜக, சிவசேனா கூட்டணி வெற்றி) அவர்கள் மதிக்க வேண்டும். இதனை நான் அவர்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.
கேள்வி: பாஜகவை தனித்து விட்டுவிட்டு, ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ், காங்கிரசை சிவசேனா அணுகுகிறதே?
பதில்: அந்த வாய்ப்பை (முதலமைச்சர் பதவி) பெற சிவசேனா குதித்துள்ளது. அதற்காக அவர்கள் தேசியவாத காங்கிரஸ், காங்கிரசை வெறித்தனமாக அணுகுகின்றனர். இது ஒரு அசாதாரமான நிலை. அந்த இரு கட்சிகளும் (காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்) அவர்களின் (சிவசேனா) இயற்கை கூட்டாளிகள் அல்ல. ஆனால் நாங்கள் அப்படியல்ல.!
கேள்வி: சிவசேனா மன்னிப்பு கேட்டால் மீண்டும் கூட்டணி உருவாக்கப்படுமா?
பதில்: அது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
இதையும் படிங்க : சோனியாவுக்கு எதிர்ப்பு, பிரதீபா பாட்டிலுக்கு ஆதரவு! - மராத்திய புலிகளின் அரசியல்...!