தாஜ்மஹால் இஸ்லாமியர் நினைவிடம் அல்ல, அது சிவன் கோயில், அங்கு ஆரத்தி எடுத்து வழிபாடு செய்ய உள்ளதாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் வீனு லவானியா பரபரப்பு கருத்து தெரிவித்தார். ஜூலை 17ஆம் தேதி தாஜ்மஹாலுக்கு சென்று தான் வழிபாடு செய்ய உள்ளதாகவும், முடிந்தால் காவல்துறை தன்னை தடுக்கட்டும் எனவும் சவால் விடுத்தார்.
இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலபடுத்தப்பட்டன. முன்னதாக, 2008ஆம் ஆண்டு சிவசேனா கட்சியினர் இதுபோல் தாஜ்மஹாலில் வழிபாடு செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானது குறிப்பிடத்தக்கது.