குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிவடைந்தது. குறிப்பாக, ஜாப்ராபாத், பஜன்பூரா, சீலம்பூர், யமுனா விஹார் ஆகிய பகுதிகள் வன்முறையால் பெரும் பாதிப்படைந்தது. இதனிடையே, மக்கள் வீடுகளிலிருந்து வெளியே வர அச்சம் தெரிவித்துள்ளனர்.
வன்முறையின்போது, வாகனங்கள், வீடுகள், கடைகள், டயர்கள் ஆகியவைக்கு தீவைக்கப்பட்டு எரிக்கப்பட்டது. இதையடுத்து, நமது ஈடிவி பாரத் செய்தியாளர் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று களநிலவரங்களை ஆராய்ந்தார்.
ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க மக்கள் அச்சம் தெரிவித்தபோதிலும், சிலர் முன்வந்து நமது செய்தியாளரிடம் பேசினார்கள். அப்போது ஒருவர் கூறுகையில், "சமீபத்தில் வாங்கிய இரு வாகனங்கள் வன்முறையின்போது தீக்கிரையானது. எங்களின் குறைகளைக் கேட்க யாரும் முன்வருவதில்லை. இங்கு குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படையினர் எங்களைக் கட்டுக்குள் வைக்கின்றனர். எங்களால் சுதந்திரமாக இருக்க முடியவில்லை" என்றார்.
இதுகுறித்து இஸ்லாமியர் ஒருவர் கூறுகையில், "பிப்ரவரி 23ஆம் தேதி மோதல் வெடித்தபோது இந்துகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை. நல்ல உறவுடன் பிரச்னை இல்லாமல் இருந்தோம். ஆனால், கலவரம் அந்த நம்பிக்கையை சிதைத்துவிட்டது. இப்போது அச்சத்தோடு வாழ்கிறோம்" என்றார்.
இதையும் படிங்க: டெல்லி வன்முறை 38 பேர் உயிரிழப்பு: உள் துறை அமைச்சரை நீக்க குடியரசுத் தலைவரிடம் காங். கோரிக்கை