உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது அதே நீதிமன்றத்தில் வேலை செய்த முன்னாள் பெண் ஊழியரான ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து இக்குற்றச்சாட்டை உச்ச நீதிமன்றம் மூத்த நீதிபதி எஸ்.எ.பாப்டே தலைமையிலான குழு விசாரித்து குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை எனக் கூறி குற்றச்சாட்டை நிராகரித்தது.
இன்று காலை ரஞ்சன் கோகாய்க்கு எதிரான குற்றச்சாட்டை நிராகரித்ததுக்கு எதிராக பெண் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்களை காவல்துறை கைது செய்தது. பிறகு, உச்ச நீதிமன்றத்தில் பாதுகாப்பினை அதிகரித்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.