பீகார் மாநிலம் கயாவில் அமைந்துள்ளது ராம்ஷீலா தாகூர்பாடி கோயில். இந்த கோயிலில் உள்ள பவளத்தால் ஆன விநாயகர் சிலையில் இருந்து வியர்வை வடிந்துள்ளது. வெப்பம் அதிகமானதால்தான் சிலையில் இருந்து வியர்வை வடிவதாகக் கூறி சிலைக்கு அப்பகுதி மக்கள் சந்தனத்தை பூசி வருகின்றனர்.
மேலும் கோயில் அலுவலர்கள் சிலையினை குளிர்ச்சிப்படுத்துவதற்காக இரண்டு மின்விசிறிகளை தயார் செய்து சிலை இருக்கும் பகுதியில் வைத்துள்ளனர். ஆனால் வெப்பம் அதிகமானதால் பவளத்தில் இருந்து தண்ணீர் வருவது இயற்கையானதாகும். விஞ்ஞானத்தை தாண்டி இப்பகுதி மக்களின் நம்பிக்கை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

முன்னோர்கள் இறந்தபோது அவர்களுக்கு ராமர் இங்குதான் சடங்குகள் நடத்தியதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.