தெற்கு மும்பையில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு நேற்று மாற்றுத்திறனாளி மாணவர் பள்ளியின் குழுவைச் சேர்ந்த ஆசிரியர்கள் வந்திருந்தனர். தலைமைச் செயலக கட்டடத்தின் மேல்தளத்திற்கு சென்ற அவர்கள், 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்யவும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேவையான நிதி ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது திடீரென இரண்டு ஆசிரியர்களில் ஒருவர் அங்கிருந்த சுவற்றின் மீது ஏறினார். தொடர்ந்து கோஷங்கள் எழுப்பிய அவர் அங்கிருந்து குதித்தனர். ஆனால் அங்கு கட்டப்பட்டிருந்த வலையில் அவர் விழுந்ததால் காயம் ஏதுமின்றி உயிரி பிழைத்தார். இதேபோல் மற்றொரு ஆசிரியரும் தற்கொலைக்கு முயன்றார்.
பின்னர் அங்கு சென்ற காவல் துறையினர் தற்கொலைக்கு முயன்ற ஹேமந்த் பாட்டீல், அருண் நெட்டுர் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களுடன் சென்ற மற்ற இரண்டு பெண் ஆசிரியைகளையும் அழைத்துச் சென்று அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக இந்தாண்டு பிப்ரவரி மாதம், தலைமைச் செயலக கட்டடத்தில் 45 வயதுடைய ஒரு நபர் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் அரங்கேறுவதை தடுக்கும் நோக்கில் தலைமைச் செயலக கட்டடத்தில் வலை அமைக்க மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார். அதன் காரணமாகவே தற்போது இந்த தற்கொலை தடுக்கப்பட்டுள்ளது.