சத்தீஸ்கர் மாநிலத்தின் தெற்கு சுக்மா மாவட்டத்தில் ஜகர்கோண்டா - தோர்னபால் கிராமங்கள் அமைந்துள்ளன. இப்பகுதியில் நக்சல்களின் நடமாட்டம், வன்முறை நிகழ்வு அதிகமாக காணப்படுவது வழக்கம். அடிக்கடி துப்பாக்கிச்சூடு, உயிர் பயத்துடன் வாழக்கூடிய நிலை ஏற்பட்டதால் கடந்த 2006ஆம் ஆண்டு இயங்கி வந்த பள்ளிகள் முற்றிலும் மூடப்பட்டது.
இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் கொண்டு வரும் வளர்ச்சித் திட்டங்களால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள், பழங்குடியினர் நன்மை அடைந்து வருகின்றனர். 2017ஆம் ஆண்டு 12 வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போக்குவரத்து வசதி மீண்டும் நடைமுறைக்கு வந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதனைத்தொடர்ந்து 13 வருடங்களாக மூடிக்கிடந்த பள்ளிகள் ஜகர்கோண்டாவில் புதிதாக கட்டப்பட்டது. இதுவரை 80 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
இந்த நிகழ்வு 13 ஆண்டுகளாக கல்வி வசதிகளை இழந்த குழந்தைகளிடையே ஒரு புதிய நம்பிக்கையை எழுப்பியுள்ளது. மேலும், தேலம் ஹத்மா, குமாரி வர்ஷா ஆகிய பகுதிகளில் இருக்கும் மாணவர்கள் ஜகர்கோண்டா பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.