மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நாட்டின் பல்வேறு பகுதியில் போராட்டம் நடத்திவருகின்றனர். குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுப் போராடிவருகின்றனர்.
18ஆவது நாளாகத் தொடரும் இந்தப் போராட்டத்திற்கான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அதன்படி, இன்று விவசாய தலைவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் போராடும் விவசாயிகளை வெளியேற்றக்கோரி அலுவலர்களுக்கு உத்தரவிடுமாறு தாக்கல்செய்யப்பட்ட மனுவை நாளை மறுநாள் (டிச. 16) உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, தலைமையில், நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்படவுள்ளது.
இதையும் படிங்க...டெல்லியில் விவசாயிகள் இன்று உண்ணாவிரதம்!