இதுகுறித்த மனுவை யாஷ் கிரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்காக தாக்கல் செய்தார். அதில், 'ஒரு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு, அவர்கள் சிறையில் பல ஆண்டுகள் தங்கள் வாழ்க்கையை கழித்த பின்னர் அவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்படும்போது, அவர்களின் பாதி வாழ்க்கையை சிறையில் கழித்துவிட்டு வெளியே வருவார்கள்.
அப்போது அவர்கள் தங்களுக்கான மரியாதையை இழந்து உடலிலும் மனதிலும் நீங்காத வலியோடும், சமூகத்தை எதிர் நோக்குவது எப்படி என பல்வேறு குழபங்களுடன் சிறைக்கு வெளியே இருக்கும் மனிதர்களை சந்திப்பார்கள். அப்படி வரும் அவர்களின் மறுவாழ்விற்கு இழப்பீடு வழங்க நல்ல ஒரு திட்டத்தினை மத்திய - மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்.
ஒருவர் தவறான குற்றச்சாட்டால் தண்டிக்கப்பட்டால் அவருக்கு ஆதரவாக சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து இழப்பீடு வழங்க வேண்டும் என சட்ட கமிஷன் 277ஆவது அறிக்கை கூறுகிறது.
மேலும் தவறான தீர்ப்பால் ஒருவர் பாதிக்கப்படுவது, இந்திய அரசியல் சட்டம் 21படி தனிமனித வாழ்க்கை மற்றும் சுதந்திரம் பாதுகாப்பதற்கு பங்கம் விளைவிக்கும் செயல்' என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: போலி பாஸ்போர்ட் வழக்கு: 32 நாள்களுக்குப் பிறகு ஜாமினில் வெளியே வரவுள்ள ரொனால்டினோ!