காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமை பெற்றது தொடர்பாக விசாரிக்க உத்தரவிடவும், அவரை மக்களவைத் தேர்தலில், போட்டியிடுவதில் இருந்து தடை விதிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, ஒரு தனியார் நிறுவனத்தின் ஆவணங்களை மட்டுமே வைத்து ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்று கூறுவதை ஏற்க முடியாது. மேலும், இந்தப் புகாரில் முகாந்திரம் இல்லை எனக் கூறி வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.