குடியுரிமை திருத்த சட்டம் இம்மாத தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இது தொடர்பான விசாரணையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்குத் தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், இச்சட்டம் தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த மனுக்கள் மீதான விசாரணையை வரும் ஜனவரி 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே. வேனுகோபாலை அழைத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, "வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா ஒரு அசாதாரண கோரிக்கையை முன்வைத்துள்ளார். அவர் ஜாமியா பல்கலைக்கழகத்துக்கு சென்றதாகவும், அங்குள்ளவர்கள் குடியுரிமை திருத்த சட்டம் பற்றி தெரிந்திருக்கவில்லை என்றும் கூறினார். எனவே, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர், "அரசு அலுவலர்கள் இச்சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்வார்கள்" என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க: 'பெரும்பான்மை இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா?' - கோபப்பட்ட பிரணாப் முகர்ஜி