ETV Bharat / bharat

சர்ஜில் இமாம் வழக்கு: 4 மாநிலங்களும் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்...!

ஜே.என்.யூ. மாணவர் சர்ஜில் இமாம் மீது ஐந்து மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒரே வழக்காக எடுத்து விசாரிக்கக்கோரிய மனு மீதான விசாரணையில், டெல்லி அரசை தவிர்த்து மற்ற நான்கு மாநிலங்களும் தங்களது பதில்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

sc-notices-to-4-states-on-sharjeel-imams-plea-for-clubbing-multiple-firs-against-him

author img

By

Published : May 26, 2020, 9:35 PM IST

சிஏஏ சட்டத்தை எதிர்த்து போராடி வந்த ஜே.என்.யூ. மாணவர் சர்ஜில் இமாம், போராட்டத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக டெல்லி, உத்தரப் பிரதேசம், மணிப்பூர், அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து விசாரிக்கும் படி உச்ச நீதிமன்றத்தில் சர்ஜில் இமாம் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் அசோக் பூஷன், சஞ்சய் கிஷன் கவுல், எம்.ஆர். ஷா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில், இந்த மனு மீது டெல்லி அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டது. இதையடுத்து, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா டெல்லி அரசு சார்பாக ஆஜாராகி, ''இந்த மனு மீது பதிலளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும். அதேபோல் டெல்லி அரசு மட்டும் இந்த மனுவிற்கு பதிலளித்தால் போதாது. மற்ற மாநிலங்களும் பதிலளிக்க வேண்டும்'' எனக் கூறினார்.

தொடர்ந்து சர்ஜில் இமாம் சார்பாக ஆஜராகிய சித்தார டேவ், ''சர்ஜில் இமாமின் இரு உரைகளை வைத்து 5 மாநிலங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி, உத்தரப் பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழக்குப் பதிவு செய்துள்ளன. சமீபத்தில் செய்தி தொலைக்காட்சி ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமி மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் ஒரே இடத்திற்கு மாற்றப்பட்டு ஒரே மனுவாக ஒரு பிரிவினர் விசாரித்தனர்'' என சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து நீதிபதிகள், இந்த மனு மீது 5 மாநிலங்களும் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: ஜேஎன்யு மாணவர் ஷர்ஜீல் இமாம் மீது உபா சட்டம் பாய்ந்தது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.