ஜம்மு காஷ்மீருக்கு 4ஜி தொலை தொடர்பு சேவை வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஹூசெபா அஹமதி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.வி. ரமணா, ஆர். சுபாஷ் ரெட்டி, பி.ஆர். காவை ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜராகி வாதாடிய அஹமதி, “நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஜம்மு காஷ்மீரில் 4ஜி தொழில்நுட்ப வசதியை அளிப்பது அவசியம்” என்று வாதிட்டார்.
மனுதாரரின் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாக ஒரு வாரத்துக்குள் பதிலளிக்கும்படி ஜம்மு காஷ்மீர் மாநில நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
கோவிட்-19 பெருந்தொற்றுக்கு ஜம்மு காஷ்மீரில் 33 பேர் பாதிக்கப்பட்டுள்ள இந்நேரத்தில், தகவல்களை தடுப்பது முற்றிலும் நியாயமற்றது. இந்திய அரசியலமைப்பின் ஜனநாயகத்துக்கும் விரோதமானது எனவும் அஹமதி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.