கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, அம்மாநிலத்தின் தேர்தல் ஆணையராக இருந்த நிம்மகடா ரமேஷ் குமாரை, பதவியிலிருந்து நீக்கி, ஓய்வுபெற்ற நீதிபதியான கனகராஜை நியமனம் செய்தார்.
மேலும் தேர்தல் ஆணையரின் பதவிக்காலத்தை ஐந்தில் இருந்து மூன்று ஆண்டுகளாக குறைத்து, அவசர சட்டம் பிறப்பித்து அரசாணை வெளியிட்டார்.
ஜெகன் மோகன் கொண்டு வந்த, அந்த அவசர சட்டத்திற்கும் கனகராஜின் நியமனத்திற்கும் தடை விதித்து, கடந்த மே 29ஆம் தேதி, ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் தடையை நீக்கக்கோரி, அதற்கு எதிராக ஆந்திர அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் தடைவிதிக்காமல் ஜெகன் மோகன் ரெட்டி அரசு எப்படி அவ்வாறு ஒரு அவசர சட்டத்தைக் கொண்டு வர முடியும் என்று கேள்வி எழுப்பியதோடு, மேலும் அம்மாநில தேர்தல் ஆணையத்துக்கும் இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதையும் படிங்க: பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்களின் பிணை வழக்கு - நீதிமன்றம் ஒத்திவைப்பு