பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி சாதியத்தின் கோர முகத்தை பட்டவர்த்தனமாக கிழித்தெறிந்த படம் "ஆர்டிக்கிள் 15". தமிழில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்ற 'பரியேறும் பெருமாள்' போல் இந்த படமும் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்திற்கு தடைகோரி 'பிராமான் சமாஜ்' என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் "ஆர்டிகள் 15" படத்துக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.