ETV Bharat / bharat

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தலாமே - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி - உச்ச நீதிமன்றம் கேள்வி

டெல்லி: லாக்டவுன் காலத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள நபர்களுக்கு உதவும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்யலாமே என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்புயுள்ளது.

SC
SC
author img

By

Published : Apr 28, 2020, 3:49 PM IST

நாடு முழுவதும் கரோனா லாக்டவுன் அமலில் உள்ள நிலையில், அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை தற்காலிகமாக நடைமுறைப்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள குடிமக்கள் அனைவரும் எந்த பகுதியில் வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை பெறும் திட்டத்தை அரசு வரும் ஜூன் மாதம் அமல்படுத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது கரோனா பாதிப்பு லாக்டவுன் நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக குடிபெயர்ந்த அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை இந்த லாக்டவுன் அசைத்துபார்த்துள்ளது.

இது தொடர்பாக தொடரப்பட்ட பொது நலன் மனு அவரச வழக்காக ஏற்கப்பட்டு நீதிபதி ரமான்னா, எஸ்.கே. கவுல்,பி.ஆர். கவய் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், பெரும் பகுதி மக்களுக்கு அடிப்படை உணவுப் பொருட்கள் தேவை என்ற தற்போதைய சூழலில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தமுயற்சி செய்யாதது ஏன் என்றும் இதை உடனடியாக அமல்படுத்த முயற்சிக்கலாமே எனவும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதையும் படிங்க: 80 மாவட்டங்களில் ஒருவருக்குக்கூட கரோனா இல்லை - ஹர்ஷ் வர்தன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.