ETV Bharat / bharat

குடிபெயர்ந்தோரின் பயணச்செலவுக்கு ரூ. 25 லட்சம் நன்கொடை வழங்க வழக்கறிஞருக்கு அனுமதி - உச்ச நீதிமன்றம்

டெல்லி: கரோனா ஊரடங்கினால் மும்பையில் சிக்கியுள்ள உத்தரப் பிரதேச தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப 25 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்க வழக்கறிஞர் ஒருவருக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

SUPREME COURT MUMBAI MIGRANTS Mumbai based lawyer Uttar Pradesh migrant workers குடிபெயர்ந்த தொழிலாளர்கள் உச்ச நீதிமன்றம் வழக்கறிஞர்
migrants workers travel fare
author img

By

Published : Jun 4, 2020, 8:32 PM IST

மும்பையில் வழக்கறிஞராகப் பணிபுரியும் சாகீர் அகமது கான் என்பவர், மும்பையிலிருந்து உத்தரப் பிரதேசத்திற்கு அனுப்பப்படும் குடிபெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாப்பாக அனுப்ப உச்ச நீதிமன்றம் அரசை அறிவுறுத்த வேண்டும் என பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

மேலும், மும்பையில் இருந்து உத்தரப் பிரதேச மாவட்டங்களான பாஸ்டி, சன்ட் கபீர் நகர் ஆகியவற்றுக்கு செல்லவிருக்கும் குடிபெயர்ந்த தொழிலாளர்களின் பயணக்கட்டணம், வழிச்செலவுகளுக்காக ரூ. 25 லட்சத்தை வழங்க முன்வந்தார்.

குடிபெயர்ந்த தொழிலாளர்களின் பயணச் செலவுகளுக்காக பணம் வழங்குவதற்கு வழக்கறிஞருக்கு அனுமதியளித்த நீதிமன்றம், அடுத்த வாரத்திற்குள் பணத்தைச் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.