ETV Bharat / bharat

மாணவர் சேர்க்கை விவகாரம்: மருத்துவக் கவுன்சிலின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம்

author img

By

Published : Jun 9, 2020, 7:08 PM IST

டெல்லி: கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் தற்போதையச் சூழலில் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை தொடர்பாக, இந்திய மருத்துவக் கவுன்சில் முன்வைத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது.

SC
SC

வரும் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை, அவர்களுக்கான கவுன்சிலிங் உள்ளிட்ட அன்றாட நடைமுறைகள் கரோனா பெருந்தொற்று காரணமாகப் பாதிப்பைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக, எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளின் நடைமுறை தொடர்பாக, இந்திய மருத்துவக் கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

அதில், 'கரோனா பாதிப்புக் காரணமாக மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கை நடைமுறைகளுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட வேண்டும். எனவே, எம்.பி.பி.எஸ் சேர்க்கைக்கான தேதியை மே 31ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையிலும், மற்ற சிறப்பு படிப்புகளுக்கான சேர்க்கைத் தேதியை மே 31ஆம் தேதியிலிருந்து ஜூலை 15ஆம் தேதி வரையிலும், முதுநிலை படிப்பிற்கான சேர்க்கைத் தேதியை மே 31ஆம் தேதியிலிருந்து ஜூலை 31ஆம் தேதி வரையிலும் நீட்டிக்க வேண்டும்' எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாலி நாரிமன், நீதிபதி நவின் சின்ஹா, நீதிபதி பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்திய மருத்துவக் கவுன்சிலின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. மேலும், நடைமுறைகள் முடிந்தபின் அது தொடர்பான விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: 'இருக்கு... ஆனா இல்ல' - குழப்பும் சிந்தியாவின் கரோனா ரிப்போர்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.