ETV Bharat / bharat

10 கோடி ரூபாயை திரும்பப் பெற்றுக்கொள்ள கார்த்தி சிதம்பரத்துக்கு அனுமதி - 10 கோடி ரூபாய் கார்த்திக் சிதம்பரம்

டெல்லி: வெளிநாடு செல்வதற்காகச் செலுத்தப்பட்ட 10 கோடி ரூபாயை கார்த்தி சிதம்பரம் திரும்பப் பெற்றுக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்
author img

By

Published : May 14, 2020, 4:02 PM IST

அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் காங்கிரஸ் மூத்தத் தலைவர் சிதம்பரத்தின் மகனும் மக்களவை உறுப்பினருமான கார்த்தி சிதம்பரத்தைப் பல்வேறு குற்ற வழக்குகளில் விசாரணை செய்துவருகின்றன.

இந்நிலையில், இங்கிலாந்து, ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறும் டென்னிஸ் போட்டிகளுக்கு செல்வதற்கு அனுமதிகோரி கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து, கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால், நிபந்தனைத் தொகையாக 10 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி, விமான விவரங்கள், பயண தேதி ஆகியவற்றை நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

இதன் பின்னரே, அமலாக்கத் துறையிடம் உள்ள கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) கார்த்தி சிதம்பரத்திடம் கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், வெளிநாட்டில் உள்ள வங்கிகளில் புதியதாக கணக்கை தொடங்குவதற்கோ, மூடுவதற்கோ நீதிமன்றம் தடைவிதித்தது.

இந்நிலையில், இதனைத் திரும்பப் பெற கார்த்தி சிதம்பரம் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதனைக் காணொலி வாயிலாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, நாகேஷ்வர ராவ் கொண்ட அமர்வு விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், நிபந்தனைத் தொகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியது.

இதையும் படிங்க: பிரதமர் நிவாரண தொகையில் வென்ட்டிலேட்டர்கள் வாங்க 2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.