தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வணிகர்களான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் சிறைக் காவலில் உயரிழந்த சம்பவத்திற்கு, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், தற்போது கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சிறையில் வைத்து காவலர்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில்தான் இருவரும் மரணமடைந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'காவல் சிறை மரணங்கள் குறித்து நாடு முழுவதும் தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற வணிகர்கள் காவல் துறையினரின் கொடூரமானத் தாக்குதல் காரணமாக உயிரிழந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
காவல் துறையினர் கொடூரத் தாக்குதல் நடத்திய பின்னர், மருத்துவரிடம் கொண்டுச் செல்லப்பட்ட நிலையில், உரிய மருத்துவம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
காவல் துறையின் இது போன்ற மனிதத் தன்மையற்ற செயலைக் கண்டிக்கும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சட்டத்தை மதிக்காமல் தூத்துக்குடி சென்றுள்ளார் உதயநிதி - அமைச்சர் ஜெயக்குமார்