ETV Bharat / bharat

'பதற்றம் வேண்டாம்... தேவை முன்னெச்சரிக்கையே' - பிரதமர் அறிவுறுத்தல் - இந்தியா கொரோனா வைரஸ்

டெல்லி: கோவிட்-19 (கொரோனா) வைரஸ் பரவி வரும் சூழலில் யாரும் பதற்றம் கொள்ள வேண்டாம் எனவும், தற்போதைய சூழலுக்கு வேண்டியது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

narendra modi
narendra modi
author img

By

Published : Mar 12, 2020, 8:07 PM IST

இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "யாரும் பதற்றப்பட வேண்டாம். முன்னெச்சரிக்கையாக இருப்பதே தற்போதைய தேவையாகும்.

வரும் நாட்களில் மத்திய அமைச்சர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள மாட்டார்கள். நாட்டு மக்கள் தேவையில்லாமல் வெளியூர்களுக்குப் பயணம் செய்ய வேண்டாம். கோவிட்-19 வைரஸ் பரவலைத் தடுத்து நிறுத்தலாம். பொது வெளியில் அதிகம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார்.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கோவிட்-19 என்ற தொற்று நோய் இந்தியா, இத்தாலி, ஈரான், தென் கொரியா உள்ளிட்ட 90-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி வருகிறது.

பிரதமர் மோடி ட்வீட், Modi tweet covid 19
பிரதமர் மோடி ட்வீட்

இந்தியாவில் இதுவரை 74 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 57 பேர் இந்தியர்கள் ஆவர். 17 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர். மேலும், இதுவரை மூன்று பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் இணையத்தில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : கொரோனா தாக்கம்: ஒரு வாழைப்பழத்திற்காக சாலையில் சண்டையிட்ட 100க்கும் மேற்பட்ட குரங்குகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.