கோவா ஆளுநர் சத்ய பால் மாலிக் பாக்பாத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசுகையில், “காஷ்மீர் ஆளுநர்கள் மது அருந்திவிட்டு கோல்ப் ஆடுவார்கள். பொதுவாக ஆளுநர்களுக்கு வேலைகள் எதுவுமில்லை.
மற்ற மாநில ஆளுநர்கள் சச்சரவிலிருந்து விலகியிருப்பார்கள்” என்று பேசியதாக தெரிகிறது.
ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் வெளியான தலையங்கத்தில், “ஆளுநர்கள் மது அருந்திவிட்டு கோல்ப் ஆடுவார்கள் என்ற கருத்தின் மூலம் ஆளுநர் பதவிக்கும் ஆளுநர் மாளிகைக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள்.
இதனை பார்க்கும் போது ஆளுநர் மாளிகை மது அருந்திவிட்டு ஓய்வெடுக்கும் ஒரு அறை போன்ற தோற்றத்தை மக்களுக்கு ஏற்படுத்துகிறது. காஷ்மீர் ஆளுநர் மது குடிக்கிறார் என்று நீங்கள் கூறுகிறீர்கள். இதற்கு முன்னால் நீங்கள் தானே காஷ்மீர் ஆளுநராக இருந்தீர்கள்.
உங்கள் கருத்துகளின் மூலம் அங்கு என்ன நடந்தது என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது. நாட்டின் அனைத்து ஆளுநர்களும் மாலிக் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிஎம்டபிள்யூ கார் களவு போய்விட்டது என நாடகமாடிய பங்குத்தரகர் கைது!